Tuesday, 3 February 2026

ரொட்டிக்கடை

முன்குறிப்பு: 
(டைரியில் இருந்து)
"This is All India Radio. News Read by...." 
தினமும் காலை 8.10 க்கு எங்கள் வீட்டு Radioவில் English News கண்டிப்பா கேக்கணும் என்பது என் அப்பாவின் order. கேட்டால் மட்டும் போதாது. ஒரு paper பேனா வெச்சுக்கிட்டு அந்த News ல எனக்கு புரிந்த எல்லா வார்த்தைகளையும் எழுதணும். News முடிஞ்சோன எங்கப்பா கிட்ட காட்டணும். காலைல 8.10 க்கு எங்க வீட்டுல டிபன் ரெடி ஆகி இருக்காது....பசியில் நான் சரியா கவனிக்காம விட்டுடப் போறேன்னு, தினமும் 8 மணிக்கு, ரெண்டு spencers bread க்கு நடுவே kissan jam வெச்சு தர ஆரம்பிச்சாங்க எங்கப்பா...நாளுக்கு நாள் நான் எழுதும் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது...:-)"

இப்படித்தான் எனக்கும் breadக்குமான பந்தம் ஆரம்பித்தது. 

சிறுவயதில், பக்கத்து வீட்டு உமாக்காவின் அத்தை  வீட்டில் ரஸ்க் செய்து கடைகளுக்கு விநியோகிப்பார். அவங்க வீட்டில் இருந்து வரும் அந்த சூடான புகையும், வாசனையும், பால்யத்தின் நினைவுகளில் இன்னைக்கும் அப்படியே இருக்கு.

ஒன்பதாம் வகுப்பில் போர்டிங் ஸ்கூல் போன பிறகு, நான்கு வருடங்கள் பசி/பட்டினியில் இருந்து காப்பாற்றிய என் தீனிப்பெட்டியில் bread&jam எப்போதும் இருக்கும். 

Innings-1   
பார்க்கறதையெல்லாம் சாப்பிடுவது ஒரு மாதிரி பிரச்சனைன்னா, பார்க்கறது எல்லாத்தையும் செய்து பார்க்கணும்ன்னு நினைக்கறது இன்னொரு மாதிரி பிரச்சனை. சதுர வடிவ sandwich bread, bun, rusk மட்டுமே தெரிந்து இருந்த நாட்கள் தாண்டி, நிறைய வித்தியாசமான bread வகைகளைப் பற்றியெல்லாம்  தெரிந்து கொண்ட போது, இத்தனை வகைகளான்னு ஆர்வமும் ஆச்சர்யமும் வந்துச்சு. 2016 வாக்கில் அதையெல்லாம்  நானே செய்து பார்க்கணும்ன்னு ஒரு ஆசை  ஆரம்பித்தது. அப்போ  Cake / biscuits செய்ய நல்லா வரும்.  அந்த நம்பிக்கையில் bread கூட easyயா செய்துடலாம்ன்னு நினைச்சேன்.
எங்க அம்மாச்சி சொல்வாங்க "ஆறு மாசம் வரை நாய் கூட புள்ளை வளர்த்துரும்"ன்னு. "குழந்தை நகர ஆரம்பிக்கற வரை பேசாம பால் குடிச்சுட்டு தூங்கும். பாத்துக்கறது எளிது"ங்கற அர்த்தத்துல அப்படி சொல்வாங்க. Basic Cakes/Cookies கிட்டத்தட்ட அந்த ரகம் தான். மாவில் Baking powderரையும் ஜீனியையும் போட்டால் பெரும்பாலும் தவறாகப் போக வாய்ப்பு இல்லை(அதே அம்மாச்சி சொல்வார், சாணியில் சீனியைப் போட்டுத் தின்னாலும்  நல்லாத்தான் இருக்கும்ன்னு😆) 
ஆனால் yeast is a different game.  Yeast பற்றிய புரிதல் இல்லாமல், சும்மா குத்து மதிப்பா bread செய்ய ஆரம்பித்தேன். Beginners luck போல, முதல்  ஓரிரு முயற்சிகள்  நல்லாவே வந்துச்சு. 
அப்போ youtube recipes இவ்வளவு famous/available இல்லை. Bread Blog பதிவுகளைப் பொறுமையாகப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவு தேடலும், நேரமும் இல்லை.  Bread people வேற ரொம்பப் பேசுவாங்க.  அவங்க சொல்ற கதை எல்லாம் படிச்சு முடிச்சு recipeக்குள்ள போறதுக்குள்ள வெறுத்துரும்.
குத்துமதிப்பு அமெச்சூர் முயற்சிகள் முதல் இருமுறைக்குப் பிறகு பெரிதாகக் கைகூடலை. சில breadலாம் balcony புறாவிற்குப் பிச்சு வெச்சா, அது கூட சாப்பிடாத அளவு மோசம்.  முயற்சியை அப்போதைக்குக் கை விட்டுட்டேன்.  
பின்ன ஊர் மாத்தி settling time அது இதுன்னு மறுபடி ஆரம்பிக்கவே முடியலை . My First bread picture :)
 
Innings-2 
2019 வாக்கில் மறுபடி ஒருமுறை முயற்சியைத் துவங்கினேன். இது second inningsன்னு வெச்சுக்கலாம். அப்ப என்ன தப்பு பண்ணேன்னா, commercial yeast வாங்க மாட்டேன்; 'Straightடா ஹீரோ தான் சார்'ன்னு நேரடியா sourdough bread செய்றேன்னு கிளம்பினது.  Sourdough breadன்னா, commercial yeast போடாம, நம்மளே மாவைப் புளிக்க வைத்து Sourdough starterன்னு ஒன்னு செய்து அதை leaven ஆக  உபயோகிப்பது. இந்த starter செய்றது ஒரு பத்து நாள் வேலை.  மாவும் தண்ணியும் உபயோகித்து  ஒரு procdure follow பண்ணி  yeast+lactobacillus colony ஒன்னு create பண்றது.  பின்ன அதை நம்ம bread leavenனா உபயோகிச்சுக்கலாம். நம்ம தயிர் உறைக்கு ஊத்தற மாதிரியான ஒரு method. But more methodical and meticulous.  அந்த starterரையும் ஒரு முறை செய்வதோடு மட்டும் இல்லாமல், தொடர்ந்து maintain பண்ணனும்.அதற்கும் ஒரு routine இருக்கு.  இப்படி ஒரு நுணுக்கமான விஷயத்துல பெரிதான புரிதல் இல்லாம தொபுக்கடீர்ன்னு தலைகீழாகக் குதித்த போது, ஒரு மாதிரியா  starter கூட   செய்துட்டேன். அதை வெச்சு 2,3 முறை breadம் செய்தேன். பெரிதாக impressive outputs இல்லேன்னாலும், பரவால்லை. Starter  maintenance routines ஒழுங்கா செய்யாம சொதப்பி, இரு வாரங்களுக்குள் ' ச்சே போ!'ன்னு மறுபடி தோல்வி.

Innings-3
பெங்களூரில் என் friend ஒருத்தி, Goan,  வீட்டிலேயே குட்டியா ஒரு milling machine வைத்துக்கொண்டு தானே மாவரைத்து வீட்டிலேயே bread செய்வா. என் மனசுல bread செய்யக் கத்துக்கணும்ங்கற நெருப்பு மொத்தமா அணைந்திடாம தணல் இருந்துக்கிட்டே இருந்ததுக்கு அவளும் ஒரு காரணம். அவளிடம் எப்போதாவது பேசறப்போ மறுபடி தணல் லேசாக் கொழுந்து விடும். பின்ன பழைய நினைவுகள் வந்து தண்ணி தெளிச்சாப்பல ஆகிரும்.
2025
இந்த முறை, முதலில் Bread projectக்கு ஒரு study phase போட்டுக்கொண்டேன்.
படிக்கப் படிக்க, Science + Maths + Art = BREAD என்பது புரிந்தது. Bakers percentage, Flour types, Gluten network,  Kneading, Stretch/fold, Coil fold, First rise/Fermentation,  Preshape/Bench rest, Second rise/Proofing, Scoring, Baking, trouble shooting என்று ஒவ்வொன்றாக ரசித்து ரசித்துப்  பரிட்சைக்குப் படிக்கறது போல படிச்சேன். நிறைய பதிவுகள் வாசித்தேன், வீடியோக்கள் பார்த்தேன். முதலில் Commercial yeast வாங்கி இந்த மொத்த Processக்கும் familiarஆகிடணும்ன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். அப்படிதான் போன வருடம் ஆரம்பித்தது இந்தப் பயணத்தின் மூன்றாவது innings. Well started is half doneன்னு சொல்ற மாதிரி, இம்முறை தொட்டதெல்லாம் வெற்றி தான். நம்மூர் டீக்கடை bun என்ன, Jewish Challah, French Baguette, Spanish Pan de Cristal, Ciabatta, Neapolitan pizza, Fougasse, Foccaciaனு எல்லாவற்றையும் ஆசை தீர  செய்து பார்த்தேன்(நாம் பார்க்க மட்டும் தானே முடியும்! பேலியோவில் இழந்ததெத்தனை!). செய்தவை எல்லாம் இங்கே ஆல்பமாக சேர்த்துக் கொண்டேன். இன்னும் சேர்ப்பேன்.
My breads album (Btw, Instaவில்  எல்லாரும் அழகழகா  dress, make-up  பண்ணிக்கிட்டு dance ஆடிக்கிட்டு சமைச்சுட்டு இருக்காங்க. தூரத்து சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு சுமாரா dress பண்ணிக்கிட்டு போய்ட்ட மாதிரி ஒரு உணர்வு வருது அங்க போனா) என் ஆல்பத்துல ஒரு 25 படம் தேறிருக்குன்னா நான் குறைந்தது  அம்பதாச்சும் செய்துருப்பேன். சிலது போட்டோ எடுக்காமயே தீர்ந்துருக்கு. சிலது போட்டோ எடுக்கற அளவு அழகா வரல. ஆனா ஒன்னு, the journey has been very rewarding. Bread வேணும்னா கடையில் வாங்கறது easy solution+ விலையும் ஓரளவு reasonable தான். இதுக்கு ஏன் இவ்வளவு மெனக்கெடணும்ன்னு தோணலாம். மொதல்ல, இது ஒரு நல்ல stress buster/hobby. கடையில் Shelf life அதிகப்படுத்தறதுக்காகவும், மிருதுவா வரணும்ங்கறதுக்காகவும் சேர்க்கற Chemicals ஏதும் போடாம, வெறும் மாவு, தண்ணி, உப்பு, yeastன்னு ரொம்ப humbleலான ingredients வெச்சு செய்ய முடியறது ஒரு satisfaction. ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு lunch box/ Potlucks க்கு எல்லாம் உபயோகமா ஆகும். ஒவ்வொரு முறை bread செய்து முடிக்கும் போதும்  நமக்கு எதையோ சாதிச்ச மாதிரி ஒரு validation/joy கிடைக்கும். பேசாம நான் ஒரு bakery ஆரம்பிச்சுடவா? ன்னு எல்லாம் ஜாலியா யோசிக்கலாம்.      
பின்/முக்கியக் குறிப்பு 1: 
மறுபடி Sourdough Starterம் செய்துட்டேன்.  ஆனா, இன்னுமே sourdough breadல beginner levelன்னு தான் சொல்லிக்கணும். ஆனா ஒவ்வொரு முறை அந்த starter double/triple ஆகறப்பவும், சின்ன வயசுல பக்கத்து வீட்டு ஆடு குட்டி போட்டதைப் பார்த்தப்ப வந்த அதே excitement வருது.சில நேரம் பாட்டிலைத் தாண்டி பொங்கி வழிஞ்சுருக்கும். ஒருவேளை யானை குட்டி போடறத நேர்ல பார்த்தா இதே உணர்வா இருக்குமா இருக்கும். 
பின்/முக்கியக் குறிப்பு 2
நிறைய bakers, bread செய்யணும்னா இத்தனை baking tools/utensils வேணும்ன்னு list போடுவாங்க. நான் வீட்டுல இருந்த basic பாத்திரங்களை வெச்சே ஆரம்பிச்சுட்டு, இப்ப bench knife, proofing basketன்னு ஒவ்வொன்னா அப்பப்ப வாங்கி சேர்க்கறேன்.  Kitchen scale மட்டும் கட்டாயம் தேவை; It is all about exact measurements; rest all can be managed. Tools Tipsக்கு என்னை அணுகவும். Bread machineலாம் இன்னுமே வாங்கலை. தன் கையே தனக்குதவி தான். Well, kneading is great fun.